×

சிறுமி பொம்மையை எடுத்ததால் துப்பாக்கி முனையில் பெற்றோர் கைது: போராட்டத்தில் குதித்த கருப்பின மக்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஷாப்பிங் மாலில் கருப்பினத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி பொம்மையை எடுத்ததால் அவரது பெற்றோரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்யப்பட்ட காட்சிகள் வைரலானதையடுத்து ஃபீனிக்ஸ் மேயர் மன்னிப்பு கோரியுள்ளார்.கடந்த 27-ம் தேதி கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷாப்பிங் சென்றபோது, அவர்களது 4 வயது மகள் ஒரு பொம்மையைக் கையில் எடுத்துக் கொண்டதாகவும், அதை பெற்றோர் கவனிக்காததால் அதற்கு பணம் செலுத்தாமல் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

கடை ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததால் அவர்கள் வந்து துப்பாக்கி முனையில் பெற்றோரை கைது செய்தனர். முகத்திலேயே சுட்டுவிடுவேன் என்றும் எச்சரித்து, கொலைக்குற்றவாளியைப் போல் பாவித்தனர். இச்சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் பரவி கண்டனத்துக்குரியதாக உருவெடுத்தது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஃபீனிக்ஸ் மேயர் மன்னிப்பு கோரியுள்ளார். இனப்பாகுபாடுடன் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தையும், போராடும் கருப்பினத்தைவரையும் மேயர் நாளை சந்தித்து பேசவுள்ளார்.

Tags : Parents ,fight , Girl doll, gun tip, arrest, fight, black people
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்