×

திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு: விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு...!

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நான்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (69), கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி கடந்த 14-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் ராதாமணி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் இன்று மாலை செய்தி குறிப்பாக வெளியிட உள்ளார். தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரையில் 234 தொகுதிகளில் தற்போது 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அந்த கடிதத்தை தலைமை தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் அந்த 2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பணப்பட்டுவாடா காரணமாக அந்த தோகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே அந்த தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 1 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : MLA ,DMK ,death ,Radhamani ,Wickrevondi , DMK, MLA Radhamani, Vikarwandi Block, Galle
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா