×

மதுரையில் தமிழ் மரபுப்படி தமிழன்னை சிலையை நிருவக்கோரி போராட்டம்: 100க்கும் மேற்பட்டவர்கள் கைது

மதுரை: மதுரையில் தமிழ் மரபுப்படி தமிழன்னை சிலையை நிருவக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரையில் நூறுகோடி ரூபாய் மதிப்பில் தமிழன்னை சிலை நிறுவப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013ம் ஆண்டு அறிவித்தார். மேலும் இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழன்னை சிலையானது தமிழ் மரபுப்படி அல்லாமல் பளிங்கு, கண்ணாடி போன்றவற்றாலும் குறிப்பிட்ட சமுதாயத்தை போன்ற பெண் போலவும் வடிவமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் மரபுப்படி தமிழன்னை சிலையை அமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அப்போராட்டத்தில் பேசிய ஒருவர், தாங்கள் சொல்கின்றபடி தமிழன்னை சிலையை வைக்க ஏற்பாடு செய்யுமாறு  கோரிக்கை விடுத்ததாகவும், தமிழ் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே நடத்துவதாகவும் தெரிவித்தார்.


Tags : Madurai , Madurai, Tamil tradition, Tamil statue, organizer, struggle, more than 100, arrested
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...