×

கிழக்கு இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் சக்திவாய்ந்த ஏற்பட்டது. புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் ஆபத்துகளுடனே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மாகாணத்தில் உள்ள குபாங் தீவு அருகே இன்று காலை 11.35 மணிக்கு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது, இந்தோனேசியாவின் தீமோர் தீவில் உள்ள குபங் நகரத்தின் வடமேற்கில் 133 கிமீ(83 மைல்) தொலைவில் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன. பீதி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்றும், உயிரிழப்புகளே அல்லது பொருட்சேதங்கள் எதுவோ ஏற்படவில்லை எனவும் அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது, இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று புவியியல் ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : earthquake ,East Indonesia , Indonesia, Jakarta, Earthquake, magnitude
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்