×

அம்பையில் சிதிலமடைந்த தாமிரபரணி ஆற்று சாலை

* சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அம்பை : அம்பாசமுத்திரம் அருகே வயல்வெளிக்கு நடுவே அமைந்துள்ள தாமிரபரணி சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவ்வழியாக மேல அம்பாசமுத்திரம் மற்றும் மன்னார்கோயில், பிரம்மதேசம், ரயில்வே காலனி, சுப்பிரமணிய புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் நடந்தும், சைக்கிள், இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் தாமிரபரணியில் நீராட சென்று வருகின்றனர்.
நதிக்கரையோரம் அமைந்துள்ள சொர்ண விநாயகர், சுந்தரவிநாயகர், புருசோத்தமபெருமாள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கும் விவசாயிகள் விளைநிலங்களுக்கு இடு பொருட்கள் கொண்டு சென்று வருகின்றனர். அம்பை சுற்று வட்டார பகுதியில் நடைபெறும் விஷேங்களுக்கு இங்கு நீராடி புனிதநீர், பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த பயன்படும் முக்கிய சாலையாகும்.

முக்கியம் வாய்ந்த இந்த சாலை குண்டும் குழியுமாக சிதிலமடைந்துள்ளதால் பக்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். அவர்கள் நலன் கருதி மழைக்கு முன் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகேசன் கூறுகையில், அம்பை நகராட்சி பகுதியில் தரமான சாலைகளை உடைத்து பல லட்சம் செலவில் மக்கள் பணத்தை வீண்டித்து புதிய சாலை அமைத்து வரும் நகராட்சி நிர்வாகம் பொது மக்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படும் தாமிரபரணி ஆற்றுச்சாலையை  உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : river road ,Thamiraparani ,ambush , Thambirabharani River,road ,Ambai
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...