×

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நல்லதுதான்; செலவு மிச்சமாகும்: எம்.பி. திருமாவளவன் பேட்டி

சென்னை: ஒரேநாடு, ஒரேதேர்தல் என்பது நல்லதுதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். இரண்டாவது ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு நாடு, ஒரு தேர்தல் என்கிற அடிப்படையில் ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. ஆனால், மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் மாறி, மாறி வருவதால், தேர்தல் ஆணையத்துக்கு ஆண்டு முழுவதும் வேலை உள்ளது. மேலும், தேர்தலுக்காக பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. எனவே, தேர்தல் செலவைக் குறைக்கும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். இது குறித்து வரும் 19ம் தேதி  ஆலோசிக்க, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2022ம் ஆண்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழாவை கோலாகலமாக கொண்டாடுவது, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவை  விமரிசையாக கொண்டாடுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சிதம்பரம் தொகுதி எம்.பி.திருமாவளவன், ஒரேநாடு, ஒரேதேர்தல் என்பது நல்லதுதான் என்றும் தேர்தல் ஆணையத்தின் செலவுகள் மிச்சமாகும், காலம் விரையமாகாது என்றார். மேலும், எந்த அளவுக்கு சாத்தியம் இல்லை என தெரியவில்லை, எந்த அளவுக்கு சீர் செய்யமுடியும் என்பதும் தெரியவில்லை என்றும் கூறினார்.


Tags : country ,election ,Thirumavalavan , Same country, same election, cost, MP. Thirumavalvan
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...