குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்த டி.என்பி.எஸ்.சி.

சென்னை: அண்மையில் நடைபெற்ற குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கேள்விகள் தவறாக இருந்ததாகவும், இது தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும், இதனால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி சார்பில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக ஒத்துக்கொண்டது. இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி ஒரு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் மனுதாரர் விக்னேஷ் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வு மதிப்பெண்களை இணையத்தில் வெளியிடகூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவு அமலில் உள்ளதால் அந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து மனுதாரப்பில் தாங்களும் ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : High Court , DNPSC, Chennai, High Court, Bad Questions,
× RELATED அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான...