×

சென்னையில் ஆதரவற்றோர், முதியோருக்கு பழைய துணி வாங்கி செல்வதாக கூறி 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடிய பெண் கைது

சென்னை:சென்னையில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு பழைய துணிகளை வாங்கி செல்வதாக கூறி  11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிய பெண்ணை கைது செய்த போலீசார் போலி அறக்கட்டளை கும்பலை தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சுசிலா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி தேனாம்பேட்டைக்கு ஆட்டோவில் வந்த சிலர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அம்மா அறக்கட்டளை என்ற பெயரில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு இலவசமாக சேவை செய்வதாக கூறியுள்ளனர். மேலும் தங்களாலான உதவியை செய்யுமாறு துண்டு பிரசுரங்களை கொடுத்து, வீடு வீடாக சென்று பழைய துணிகள் மற்றும் சிறு தொகையை பெற்று சென்றுள்ளனர்.

இந்நிலையில் சுசிலா வேளைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது மகன் வீட்டில் இருந்த பழைய துணியை, துணி சேகரிக்க வந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சுசிலா பழைய துணி மூட்டையை பற்றி கேட்ட போது அவரது மகன் நடந்ததை கூறியதும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். மேலும் வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக சேமித்த 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருட்டு பயம் காரணமாக பழைய துணி மூட்டையில் கட்டி வைத்துள்ளார் சுசிலா, இதனை அறியாத சுசிலாவின் மகன் அந்த பெண்ணிடம் மூட்டையை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து துண்டு பிரசுரத்தில் இருந்த முகவரிக்கு தனது கணவருடன் சுசிலா விசாரிக்க சென்ற போது அந்த இடன் பாழடைந்த ஓட்டு கொட்டைகையாக இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுசிலா அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் பதிவுஎண்ணை வைத்து ஆட்டோ உரிமையாளரை விசாரித்த போது மகாலட்சுமி என்பவர் தனது ஆட்டோவை வாடகைக்கு எடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து செங்குற்றம் பகுதியில் இருந்த மகாலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தியதில் பணத்தை திருடியதை ஒத்துக்கொண்டார். இதையடுத்து அவரது வீட்டிலிருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மகாலட்சுமியிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பணம், காசோலை, மற்றும் பழைய துணிகளை பெற்று பணம் சம்பாதிக்க சென்னையில் ஒரு பெரிய கும்பலே செயல்படுவது தெரியவந்துள்ளது.


Tags : orphans ,Chennai , Chennai, orphans, elderly, old cloth, fraud, 11 lakhs 50 thousand, theft, woman arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...