×

இறால் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: இறால் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக கடலில் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதனால் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் 10 ஆயிரம் விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டன. மேலும், 2  லட்சம் மீனவர்கள் வேலை இழந்து மாற்றுத்தொழில் ஈடுபட்டனர்.

ஜூன் 14ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடி தடை விலகியதால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1,500க்கும் அதிகமாக விசைப்படகுகளில்  ஏராளமான மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஒரு கிலோ இறால் ரூ.520-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு ரூ.400-க்கு மட்டுமே ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்வதால் ஏமாற்றமே மிஞ்சுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் செய்வதாலேயே தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது படகு உரிமையாளர்களின் குற்றச்சாட்டு. அரசு தலையிட்டு அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : fishermen ,Rameshwaram , Shrimp, Fishermen, Rameswaram, Strike, Fishing Border
× RELATED இலங்கை சிறையிலிருந்து...