லாரி மோதி உயிரிழந்த டெய்லர் குடும்பத்துக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு

சென்னை:  சென்னை அய்யப்பன்தாங்கல், சுப்ரமணியன் நகர், கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி பிருந்தா. டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு திருவள்ளூர் - திருத்தணி சாலையில் சங்கர் தனது மனையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சுங்கச்சாவடி அருகே சென்றபோது, வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பிருந்தா உயிரிழந்தார். இதையடுத்து, இறந்த மனைவிக்கு இழப்பீடு கோரி சங்கர் சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ‘‘ இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 19 லட்சத்து 8 ஆயிரத்து 950 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.

Related Stories: