×

லாரி மோதி மாணவன் பலி

துரைப்பாக்கம்: புதுடெல்லியைச் சேர்ந்தவர் அணிஷ்சிங் (32). இவரது மனைவி சுமன் சவுகான் (28). இவர்களது மகன்கள் அதில் (7), பன்னி (2). இவர்கள் சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 2 ஆண்டாக வசித்து வருகின்றனர். சிறுவன் அதில், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சுமன் சவுகான் தனது மகன் அதிலை பைக்கில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கூட சாலை வழியாக சென்றபோது பின்னால் அதிவேகத்தில் வந்த கழிவுநீர் லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் அதில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சுமன் சவுகான் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Lorry kitty student , Lorry,collides, student
× RELATED லாரி மோதி மாணவன் பலி