துபாயில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி பஸ்சில் தூங்கிய சிறுவன் பரிதாப சாவு

துபாய்: துபாயில் பள்ளி பேருந்தில் தூங்கிய சிறுவன் பல மணி நேரமாக கண்டுபிடிக்கப்படாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்தவர் பைசல். இவரது குடும்பம் நீண்ட ஆண்டுகளாக துபாயில் உள்ள கரமா பகுதியில் வசித்து வருகிறது. பைசலின் மகன் முகமது பர்ஹான்(3). அல்குவாசில் உள்ள இஸ்லாமிக் மையத்தில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டான். பர்ஹா–்ன் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளி பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டான். அப்போது, அவன் தூங்கி விட்டதாக தெரிகிறது.

காலை 8 மணிக்கு பள்ளிக்கு பேருந்து சென்ற பின்னர் அதில் இருந்த மாணவர்கள் அனைவரும் இறங்கி வகுப்பறைகளுக்கு சென்றுவிட்டனர். ஆனால், தூக்கத்தில் இருந்த பர்ஹான் எழவில்லை. இதனை யாரும் கவனிக்கவில்லை. பேருந்து குளிர்ச்சாதன வசதி கொண்டது என்பதால் வெளிக்காற்று புகாத கண்ணாடிகளை கொண்டது.பிற்பகல் 3 மணிக்கு மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ஓட்டுனர் பேருந்ைத எடுக்க முயன்றார். அப்போது பேருந்தில் சிறுவன் பர்ஹான் மயங்கிய நிலையில் கிடந்தான். உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Tags : incident ,Dubai , Shocking incident ,Dubai, A boy sleeping , school bus
× RELATED காட்டெருமையுடன் நடந்த சண்டையில் புலி...