ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து மாணவர்களுக்கு விற்க பதுக்கிய ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா சிக்கியது: தாய், மகன், மருமகளுக்கு வலைவீச்சு

நாகை: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து நாகையில் மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி. விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ஏஎஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த 2 தினங்களாக  பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

நேற்று நாகை வெளிப்பாளையம் தர்மகோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட சென்றனர். போலீஸ் வருவதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், பதுக்கி வைத்திருந்த 20 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் தப்பியவர்கள், நாகையை சேர்ந்த ராணி, இவரது மகன் ஆனந்த், அவரது மனைவி மீனாட்சி என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து நாகையில் மாணவர்களுக்கு சிறிய, சிறிய பொட்டலங்களில் போட்டு பல இடங்களில் விற்பனை செய்வது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி. இதனை தொடர்ந்து அங்கு பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Tags : daughter-in-law ,Andhra Pradesh , Cannabis worth, Rs 1 crore stolen, Andhra Pradesh sells,students, mother, son ,daughter-in-law
× RELATED முருங்கை மரம் உரசி மின்வயர் அறுந்த...