தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை: அரசுக்கு தமாகா வலியுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், கத்திப்பாரா ஜனார்த்தனன், விடியல் சேகர், என்டிஎஸ்.சார்லஸ், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ரயில்வே ஞானசேகரன், முனவர் பாட்ஷா, மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, விக்டரி மனோகரன் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.பின்னர் கூட்டத்தில், நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு திட்டத்தை தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கி செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தமிழகத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். காமராஜர் பிறந்த நாள் விழாவை ஜூலை 21ம் தேதி திருப்பூரில் மாநில அளவில் பெருவிழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு திட்டத்தை தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கி செயல்படுத்த வேண்டும்.Tags : Tamil Nadu ,government ,Tamanna , Wartime , overcome shortage, drinking water throughout,Tamil Nadu
× RELATED அறந்தாங்கி பகுதியில் குழாய் உடைந்து...