×

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு தர போலீஸ் மறுப்பு கோர்ட்டில் தீர்வு காண்போம்: நாசர் பேட்டி

புதுக்கோட்டை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்ககோரி பாண்டவர் அணியைச் சேர்ந்த நாசர், பூச்சி முருகன், பசுபதி, அஜய்ரத்னம், பிரேம்குமார், நந்தா, சோனியா, விக்னேஷ், ரமணா, வாசுதேவன், ஜெரால்டு உள்ளிட்ட பல நடிகர்கள் புதுக்கோட்டை வந்து முத்தமிழ் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஆதரவை திரட்டினர்.பின்னர் நடிகர் நாசர் அளித்த பேட்டி: நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை  தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு சட்டப்படி நீதிமன்றத்திற்கு சென்று தீர்வு காண்போம், சங்க கட்டிடத்தை தனிப்பட்ட நபர்கள் கட்ட முடியாது. சங்க கட்டிடத்தை அனைவரும் ஒன்றிணைந்துதான் கட்ட முடியும். தனிப்பட்ட நபர்கள் யாரும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. எங்கள் அணியில் இருக்கும்போது  கலைநிகழ்ச்சி நடத்தியது குறித்து குற்றம் சாட்டாதவர்கள் இப்போது குற்றம் சாட்டுவது ஏன்? நாங்கள் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியுள்ள நிலையில் விரைவில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கோர உள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை 90% நிறைவேற்றி உள்ளோம்.
மேலும் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று பாண்டவர் அணி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். நடிகர் சங்கத் தேர்தலில்அரசியல் தலையீடு இல்லை

மதுரையில் விஷால் பேட்டி
அவனியாபுரம்: நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை. அனைத்து கட்சியினரும் பாண்டவர் அணியில் போட்டியிடுகின்றனர் என மதுரையில் நடிகர் விஷால் கூறினார். மதுரை விமான நிலையத்தில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரியவில்லை. அனைத்து ஊர்களிலும் எங்களுக்கு சிறப்பான ஆதரவு கிடைக்கிறது. அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறோம். எங்கள் அணியில் அனைத்து கட்சியினரும் உள்ளனர். இது அரசியல் தலையீடு எதுவும் இல்லாத தேர்தல்’’ என்றார்.இதனை தொடர்ந்து அவர், மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்தினரை சந்தித்து ஆதரவு கேட்க சென்றார்.

Tags : interview ,Nasser ,actor , Naser interviews,police refusal , defend Actor's election
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு