×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய வீரர்கள் விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா, தோனி சாதனை

மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறும்  போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக இந்தியா அணி நிர்ணயித்தது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி  கேப்டன் சர்பிராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள்  இழப்பிற்கு ரன்களை குவித்தது. ஷிகர் தவானுக்கு மாற்றாக ரோகித் சர்மாவுடன் இணைந்து லோகேஷ் ராகுல் நல்ல துவக்கம் கொடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய லோகேஷ் ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்த  
இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி அதிரடி காட்டினார். இதற்கிடையே, அரைசதம் விளாசிய ரோகித் சர்மா 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோஹ்லியுடன் இணைந்து அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா பாண்டியா 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மகேந்தி சிங் டோனி 2 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விராட் கோஹ்லியுடன் தமிழக  வீரர் விஜய் சங்கர் இணைந்தார். இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் 46.4 ஓவர்களில் 305 ரன்களை இந்திய அணி எடுத்த நிலையில் போட்டி  நிறுத்தி வைக்கப்பட்டது.

விராட் கோஹ்லி:


இதற்கிடையே, சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட்  கோஹ்லி முறியடித்தார். 222 போட்டிகளில் விளையாடிய விராட் கோஹ்லி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். விராட் கோலி ஏற்கனவே, 10,000  ரன்களை விரைவாக கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்துள்ளார். நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய  போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் எடுத்தபோது இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்பு 276  இன்னிங்ஸில் சச்சின் 11 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த சாதனையில், ரிக்கி பாண்டிங், கங்குலி,  காலிஸ் அடுத்தடுத்து உள்ளனர்.

ரோஹித் ஷர்மா:

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 358 சிக்சர்கள் அடித்து தோனியின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார். நடைபெற்று வரும்   உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 சிக்சர்கள் அடித்த போது இந்த சாதனையை  முறியடித்தார். தோனியும் ரோகித் சர்மாவும் தலா 355 சிக்சர்களை விளாசி இருந்த நிலையில் தோனியை முந்தி ரோகித் சர்மா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த உலக்கோப்பை போட்டியில் ரோஹித் ஷர்மா 2-வது சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனி:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் மகேந்திர சிங் தோனி புதிய சாதனை படைத்து இருக்கிறார். சாதனை பொதுவாக உலகில் சில வீரர்கள் மட்டும்தான் 10 வருடம் 15 வருடம் எல்லாம் கிரிக்கெட் உலகில் விளையாடி இருக்கிறார்கள். இந்திய அணி வீரர் தோனி 2004-ம் ஆண்டு இந்திய அணிக்குள் நுழைந்தார். அதன்பின் இந்திய அணியின் கேப்டன் ஆகி, பல்வேறு கோப்பைகளை தோனி வாங்கி கொடுத்தார்.

இந்திய அணியில் சச்சின்தான் மற்ற வீரர்களை விட ஒருநாள் போட்டியில் அதிக முறை விளையாடி இருக்கிறார். மொத்தம் சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் அதிக முறை 11 பேர் ஆடும் அணியில் இடம்பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டியில் இரண்டாவதாக இந்திய அணியில் 11 பேர் கொண்ட ஆடும் அணியில் ராகுல் டிராவிட் மொத்தம் 340 ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனையை தோனி முறியடித்து இருக்கிறார். இன்று இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் அவர் இந்திய அணிக்காக அதிக முறை ஒருநாள் அணியில் இடம்பிடித்த இரண்டாவது வீரர் என்ற பெயரை தோனி பெற்றுள்ளார். அதன்படி தோனி 341 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெற்று இருக்கிறார். பெரிய கஷ்டம் இதில் அசாருதீன் 334 மற்றும் கங்குலி 308 அணிகளில் விளையாடி அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். இதில் சச்சின் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா-கே.எல்.ராகுல் ஜோடி சாதனை:

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி சாதனை படைத்துள்ளது. இந்தியா -பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். காயம் காரணமாக ஷிகர் தவான் விளையாடாததால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக இறங்கினார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய ராகுல், சிக்ஸர் அடித்து 69 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறப்பாக விளையாடி ராகுல் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 78 பந்துகளில் 57 ரன்கள் அடித்து வாஹப் ரியாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு ரோகித் - ராகுல் ஜோடி 136 ரன்கள் எடுத்தது. உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்கு முன்பாக 1996-ல் சச்சின் டெண்டுல்கர் - நவ்ஜோத் சிங் சித்து ஜோடி 90 ரன்கள் அடித்ததே அதிகபட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : World Cup Cricket ,Virat Kohli ,Indian ,Dhoni ,Rohit Sharma , World Cup Cricket, Indian Players, Virat Kohli, Rohit Sharma, Tony, Achievement
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...