சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி

மான்செஸ்டர்: சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்தார். இவர் 222 போட்டிகளில் விளையாடிய இவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். விராட் கோலி ஏற்கனவே, 10,000 ரன்களை விரைவாக கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்துள்ளார். நடைபெற்று வரும்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் எடுத்தபோது இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

× RELATED அளவுக்கு மீறி அப்பீல் கோஹ்லிக்கு அபராதம்