புல்வாமா அருகே தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் எச்சரிக்கை: இரட்டை பாதுக்காப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் எச்சரித்ததை  அடுத்து, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அல் கய்தா தீவிரவாத இயக்கத்தின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதி ஜாகிர் மூசா கடந்த மாதம், காஷ்மீர் மாநிலம் ட்ராலில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதகரகத்துக்கு அந்நாடு தகவல் கொடுத்துள்ளது.இந்த தகவலை ஏற்றுக்கொண்ட இந்திய ராணுவம் அந்த பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிடமும் இதே தகவலை பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் காஷ்மீரில் உள்ள அனைத்து பாதுகாப்பு முகமைகளும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியின் பரபரப்பு சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags : terrorists ,Pakistani ,attack ,Pulwama , Pulwama, terrorists, Pakistan, double security
× RELATED எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்