நீங்க எல்லாம் டீ கப் பெறத்தான் லாயக்கு அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தானுக்கு ‘நச்’ பதிலடி

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன. இந்த போட்டியால் இரு நாடுகளிலும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் ஜூரம் பற்றிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஊடகம் ஒன்று,  பாகிஸ்தானின் விமானத்தை சுட்டுவீழ்த்தியதால் அந்நாட்டிடம் சிக்கி மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வைத்து இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தது.அதற்கு தகுந்த பதிலடியாக தற்போது இந்தியா தரப்பில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. வி செவன் பிக்சர்ஸ் என்ற யூடியூப் சேனலின் இந்த விளம்பரத்தில், டீ கப்புக்குத்தான் பாகிஸ்தான் லாயக்கு என்று சொல்லப்பட்டுள்ளது.

வீடியோவில், முடி திருத்தும் கடையில் அமர்ந்திருக்கிறார் ஒருவர். அவர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வெளிர்நீல நிற பனியனை அணிந்திருக்கிறார். அதே கடைக்கு வரும் அவரது மகன், தந்தைக்கு கைக்குட்டை ஒன்றை  பரிசளித்துவிட்டு, நாளை பாகிஸ்தான் வெற்றிக்கு பின்னர்  முகத்தை மூட இந்த கைக்குட்டை உதவும் என்கிறான். இதற்கு பாடம் கற்பிக்க, ஷேவிங் கடைக்காரர் அவருக்கு அபிநந்தன் ஸ்டைலில் தாடி, மீசையை வெட்டிவிடுகிறார்.  இதைப்பார்த்து மகன் அதிர்ச்சி ஆகிறார். அப்போது மகனை பார்த்து, “இதுதான் எங்க ஹீரோ ஸ்டைல். உங்களுக்கு வேர்ல்ட் கப்பெல்லாம் கிடையாது. அபிநந்தன் குடித்து மீதம் வைத்த டீ கப்பை பெறத்தான் நீங்க லாயக்கு” என்கிறார் தந்தை.  பின்பு கைக்குட்டையை அவனிடமே கொடுத்து, முகத்தை மூடிக்கோப்பா என்று அனுப்பி வைக்கிறார்.

Related Stories:

>