களமிறங்கியது ஹூண்டாய் வெனியூ

வாடிக்கையாளர்கள்  மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ சப்-4  மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் (5 சீட்டர்) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம்  செய்யப்பட்டது. ஆன்லைன் வாயிலாக ₹21 ஆயிரம்  முன்பணம் செலுத்தி, ஹூண்டாய் வெனியூ  கார் புக்கிங் செய்யப்படுகிறது.7 சிங்கிள் டோன்  கலர் மற்றும் 3 ட்யூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம்களில் ஹூண்டாய் வெனியூ  விற்பனை செய்யப்படுகிறது. 1.0 லிட்டர் எஸ்எக்ஸ் மற்றும் 1.4  எஸ்எக்ஸ் வேரியண்ட்களில் மட்டுமே ட்யூயல் பெயிண்ட் ஆப்ஷன் கிடைக்கிறது.  1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல்,  1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் யு2   சிஆர்டிஐ டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை வெனியூ காரில் ஹூண்டாய்  நிறுவனம் வழங்கியுள்ளது.

இதில், நேச்சுரலி அஸ்பிரேடட்டட் இன்ஜின்  அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. இன்ஜின் சக்தியானது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழியாக முன்சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. அதே சமயம்,  டர்போசார்ஜ்டு 3 சிலிண்டர்  பெட்ரோல் இன்ஜினில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச்  ஆட்டோமெட்டிக் என மொத்தம் 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில், ஆண்ட்ராய்டு  ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச்  ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூப், வயர்லெஸ்  சார்ஜிங், புரொஜெக்டர் பனி விளக்குகள், நேவிகேஷன்,  ஏர் பியூரிபையர்  மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் உள்பட ஏராளமான உயர்தர வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. விலை ₹6.50 லட்சத்தில் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) இருந்து துவங்குகிறது. டாப் வேரியண்ட் ₹11.11 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>