×

தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்றபோது நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 5 மீனவர்கள் உயிர் தப்பினர்

பெரம்பூர்: தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்றபோது, நடுக்கடலில்  படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடிந்ததால், நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு  தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது படகில் சுரேஷ், குப்பன், சுரேந்தர், சண்முகம் ஆகியோருடன் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றார். இவர்கள்  80 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் விரிசல் ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்தது.  

இதையறிந்த மீனவர்கள் உடனடியாக அந்த படகில் இருந்த கேன்கள் மற்றும் உயிர் காக்கும் லைப் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு  படகின் மேல் நின்று தங்களை காப்பாற்றும்படி பல்வேறு சைகைகள் செய்து கொண்டிருந்தனர்.  படகு கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கியது. இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில் அந்த வழியாக படகில் வந்த  காசிமேட்டை சேர்ந்த தேவராஜ் என்பவர், உடனடியாக தங்களோடு இருந்தவர்கள் உதவியோடு அந்த 5 பேரையும் மீட்டார்.

Tags : fishermen , 5 fishermen, survive, boat ,capsizes
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...