×

சென்னை கடைகளில் பிளாஸ்டிக் இருந்தால் அபராதம்

* நாளை முதல் அமல்
* மாநகராட்சி அதிரடி
சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடம் நாளை மறுமுதல் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பான மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மாநகராட்சி லைசென்ஸ் இல்லாத கடைகள் சீல்  வைக்கப்பட்டது. எனினும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து நாளை முதல் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது ெதாடர்பான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி  பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு முதல் முறை ரூ. 1 லட்சம், 2 வது முறை ரூ. 2 லட்சமும், 3 வது முறை ரூ. 3 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைப்பவர்களுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரமும், 2 வது முறை ரூ.50 ஆயிரமும், 3 வது முறை ரூ.1  லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.  வணிக வளாகங்களில் விற்பனை செய்தால்  முதல் முறை ரூ.10 ஆயிரமும், 2 முறை ரூ.15 ஆயிரமும், 3 வது முறை ரூ.25  ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல் முறை ரூ.1000 மும், 2 வது முறை  ரூ.2 ஆயிரமும், 3 வது ரூ.5 ஆயிரமும் விதிக்கப்படும். சிறு வியாபாரிகளுக்கு  முதல் முறை ரூ.100 ம், 2 வது முறை ரூ.200 ம், 3 வது முறை ரூ.500 ம்  விதிக்கப்படும். இதையும் மீறி தடையை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை  பயன்படுத்தினால் வணிக உரிமை ரத்து செய்யப்படும்.


Tags : Chennai ,stores , Chennai stores , fine ,r plastic
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்