ஈரோட்டில் 23ம் தேதி பாசன பாதுகாப்பு மாநாடு

சென்னை: கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி அறிக்கை:கர்நாடகாவில் காவிரி நீரின் பயன்பாடு கூடிவிட்ட காரணத்தால் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருந்த காவிரி நீரின் அளவு குறைந்துபோய் விட்டது. குறுகிய கால நெல் ரகங்களை நட வேண்டிய கட்டாயத்திற்கு காவிரி வடிநிலம் தள்ளப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப  பயிர்முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதைச் செய்யாமல் ெபாதுப்பணித்துறை  முறையில் நீர்நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருப்பது 10 வயதில் தைத்த சட்டையை 18வது வயதில் போடச் சொல்வதைப் போன்றதாகும். 23ம் தேதி ஈரோட்டில்  நடக்கும் கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு மாநாட்டில் மேலே சொன்ன பயிர்முறை மாற்றமும் உணவு முறை மாற்றமும் முக்கியத்துவம் பெறும் என கூறியுள்ளார்.

Tags : Irrigation Safety Conference , Irrigation ,Conservation, Conference , 23rd , Erode
× RELATED கலவர பூமியாக மாறிய தலைநகர்:...