×

மேகதாது அணை கட்ட வழங்கிய ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிநிருபர்களிடம் கூறியதாவது:  பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளேன். அதில், மேகதாதுவில் அணைகட்ட வழங்கிய ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதி வழங்கிட வேண்டும். காவிரி திட்டத்தை தேசிய திட்டத்தின் கீழ் புரனைக்க மத்திய அரசு தரப்பில் ரூ.17 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். இதை தவிர மத்திய அரசு தரப்பில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை நிதியை விரைவில் வழங்கிட வேண்டும்.  

தமிழகத்தில் ஏழை, எளியோருக்கு 8 லட்சம் வீடும், குறிப்பாக கஜா புயல் பாதித்த பகுதிகளில் 2 லட்சம் வீடு உடனடியாக வழங்க வேண்டும். ராமநாதபுரம், விருதுநகரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும். மேலும், மாநிலத்தின் குடிநீர் செயல்திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கித்தர வேண்டும். காவிரி ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடகா அரசு நீர் திறந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உட்பட அனைத்து மத்திய மத்திய அமைச்சர்களும் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு கூறினார்.


Tags : Megadadu Dam ,Edappadi Palanisamy , Cancel approval , build Megadadu Dam, Interview, Edappadi Palanisamy
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...