×

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க குழு அமைக்கப்பட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க குழு அமைக்கப்பட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பருவமழை பொய்த்த காரணத்தால் உருவாகியுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக, வறட்சி நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சுமார் 62% பருவமழை பொய்த்துள்ளதன் காரணமாகவே தீவிர தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு கடும் வறட்சி நிலவிய போதே, மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்தது. நடப்பாண்டிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். தற்போது நிலவிவரும் நீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தலைநகர் சென்னைக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நாளொன்றுக்கு 520 மில்லியன் லிட்டர் தண்ணீர் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை நாளொன்றுக்கு 9100 நடைகள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி என எங்கு நீர் ஆதாரம் கிடைத்தாலும், உடனடியாக கொண்டு வந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதல்வர், துணை முதலவர் அம்மாநில அரசுடன் பேசி வருகின்றனர். மழை குறைந்ததால் தான் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தண்ணீர் இருக்கும் இடங்கள் ஆராயப்பட்டு வருகிறது. மேலும் பேசிய அமைச்சர் மாநிலம் முழுவதும் ஏராளமான வறட்சி நிவாரண பணிகள் நடைபெற்றுள்ளன. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து, குடிநீர் திட்டங்களுக்காக ரூ.5,000 கோடி நிதி வழங்குமாறு கேட்டுள்ளோம் என்றார். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க குழு அமைக்கப்பட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.


Tags : team ,SB Velumani ,Tamil Nadu , Tamil Nadu, water problem, wartime action, SP Vellumani
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...