தாவரவியல் பூங்காவில் அழுகிய மலர் செடிகள் அகற்றம்

ஊட்டி :  ஊட்டி  தாவரவியல் பூங்காவில் கடந்த மாதம் மலர் கண்காட்சி நடந்த நிலையில், சுற்றுலா  பயணிகள் பார்வைக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர்  அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக, நுழைவு வாயில் பகுதியில்  நட்சத்திர வடிவிலான மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில்,  மஞ்சள் நிற மேரிகோல்டு மலர்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. இதில், மலர்  அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதேபோன்று பூங்காவின்  பல்வேறு பகுதிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருந்தன. மேலும்,  இத்தாலியன் பூங்காவிலும் பல்வேறு வகையான மலர் செடிகள் பல்வேறு வடிவங்களில்  உள்ள பாத்திகளில் நடவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், சீசன் முடிந்து 15  நாட்கள் ஆன நிலையில், பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டிருந்த மேரி  கோல்டு மலர்கள் அழுகிவிட்டன. பல இடங்களில் காய்ந்து அலங்கோலமாக  காட்சியளித்தது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் முகம் சுழித்தனர்.  இந்நிலையில், இந்த மலர் செடிகளை அகற்றும் பணிகளை தற்போது பூங்கா நிர்வாகம்  துவக்கியுள்ளது. முதற்கட்டமாக பூங்கா நுழைவு வாயில் பகுதியில் இருந்த  நட்சத்திர வடிவில் நடவு செய்யப்பட்டிருந்த மலர் செடிகள் தற்போது  அகற்றப்பட்டுள்ளது.

அதேபோல், பூங்காவில் பல்வேறு பகுதகிளில் நடவு  செய்யப்பட்டிருந்த மேரிகோல்டு மலர் செடிகளும் அகற்றப்பட்டு விதைகள்  சேகரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ேமலும், மலர்கள் அகற்றப்பட்ட  இடங்களில் வேறு மலர் செடிகளை வைக்கவும் பூங்கா நிர்வாகம் ஆலோசித்து  வருகிறது.

× RELATED கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்