×

தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தடுப்புகளில் ஒளிரும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்ட வலியுறுத்தல்

பரமத்திவேலூர் : பரமத்திவேலூர்  தேசிய நெடுஞ்சாலையில், விபத்துக்களை தடுக்க  வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளில், இரவில் ஒளிரும் ரிப்ளக்டர்  ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கிராம சாலைகள் பிரிவு, நான்குரோடுகள்  சந்திப்பு பகுதிகளில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படாமல்  தடுக்க, கீரம்பூர், சுண்டக்காம்பாளையம் பிரிவு சாலை,  பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம், பரமத்திவேலூர் நகருக்குள் செல்லும்  பிரிவுசாலை உள்ளிட்ட பல இடங்களில், இரும்பு தடுப்புகள் (பேரி கார்டுகள்) வைக்கப்பட்டு உள்ளன. இங்கு  இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதற்கான அறிவிப்பு பலகைகள் ஏதும்  இல்லை. தவிர, இரும்பு தடுப்புகளில் இரவில் ஒளிரக்கூடிய ரிப்ளக்டர்  ஸ்டிக்கர்களும் ஓட்டவில்லை.

இதனால், இரவு நேரத்தில் வரும் வாகனங்களுக்கு  இரும்பு தடுப்பு இருப்பதே தெரிவதில்லை. இதனால், அடிக்கடி இருசக்கர வாகனங்கள்  மற்றும் கார் உள்ளிட்டவை மோதி விபத்துக்களும், உயிரிழப்புகளும்  ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து,  சாலையில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, 100 மீட்டர்  தொலைவில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். மேலும், இரும்பு தடுப்புகளில் இரவு  நேரத்தில்  ஒளிரும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை ஒட்டவேண்டும் என வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : highway , Barrycades,paramathivelur,reflectors,Accident,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...