×

குளித்தலை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் போல் வந்த 102 இலவச தாய்சேய் ஊர்தி

குளித்தலை : குளித்தலை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் போல் 102 இலவச தாய் சேய் ஊர்தி வந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அடுத்த நிலையில் உள்ளது குளித்தலை தலைமை அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பிரசவத்திற்கு வரும் பெண்கள் குழந்தைகளுடன் வீட்டிற்கு செல்லவேண்டும் என்றால் இதற்கு முன் தனியார் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

தற்போது தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ காலத்தில் இலவசமாக குழந்தையை உடன் அழைத்துச் செல்லும் வகையில் 108 வாகனம் போல் 102 இலவச தாய்சேய் ஊர்தி (பிரசவ வாகனம்) குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வாகனத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவம் ஆகி குழந்தைகளுடன் வரும் பெண்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனம் தற்போது குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Bathinda Government Hospital , 108 Ambulance,102 Mother Chee,Van ,kulithalai
× RELATED கொடைக்கானல் பயணத்தை முடித்துக்...