பிரியாணியில் கரப்பான் பூச்சி சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி

* மூணாறில் பரபரப்பு

மூணாறு : மூணாறில் ஓட்டலில் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறில் உள்ள பல ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்குவதாக தொடர்ச்சியாக புகார் உள்ளது. கடந்த வாரம் மூணாறில் இருந்து உணவு சாப்பிட்ட பல பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மூணாறில் உள்ள ஒரு ஓட்டலில் லாரி ஓட்டுனர்கள் பிரியாணி வாங்கினர். அதை பிரித்து பார்த்தபோது கரப்பான் பூச்சியும் அதன் முட்டையும் இருந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘மூணாறில் உள்ள உணவகங்களில் முன்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் அடிக்கடி பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் புதிய சுகாதாரத்துறை அதிகாரி பொறுப்பேற்றதில் இருந்து இந்த பரிசோதனைகள் முடக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் காட்டும் அலட்சியப்போக்கு காரணமாக சுகாதாரமற்ற உணவு விற்பனை தடையின்றி நடக்கிறது’’ என்றனர்.

Tags : Munnar, Briyani,cockroach, hotel
× RELATED இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை