×

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி..: மழையால் ரத்தானால் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பீடு ஏற்படும் என கணிப்பு!

மான்செஸ்டர்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பீடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த கோப்பையை எந்த அணி வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத வகையில் தொடர் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா, நியூஸிலாந்து அணிகளை தவிர அனைத்து அணிகளும் மற்ற அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளன. இதற்கிடையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இங்கிலாந்தில் மைதானத்தில் மோதிக்கொள்ளும் இரு அணிகளுக்கு எதிராய மழை ஒருபுறம் களமிறங்கி வெற்றியை பறித்து செல்கிறது. இதுவரை நடைபெற்ற 19 லீக் போட்டிகளில் 4 ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து போட்டிகளும் அடங்கும்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை(நாளை) நடைபெறவவுள்ளது. ஆனால் இந்த போட்டியிலும் மழை குறுக்கிடும் என்று தெரிகிறது. அதாவது, இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணிப்பின்படி மான்செஸ்டர், ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் வரும் ஞாயிறன்று 70 சதவீதம் மழை பொழிய வாய்ப்புள்ளது. இதனால், போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் நிலவும் வானிலை ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் காண்பதற்காகவே 80,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். மற்ற போட்டிகளை விட மும்மடங்கு வரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டாலும் அதை பெற ரசிகர்கள் தயக்கம் காட்டுவதில்லை. இதை குறிவைத்தே பெரும் வணிகமும் நடைபெறுவதால் போட்டி ரத்தானால் ரூ.100 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Tags : Indo-Pak ,cricket match competition , India, Pakistan, Cricket, Rain, Revenue Compensation,Worl cup
× RELATED ஜம்முவில் தீவிரவாதிகள் ஊடுருவ ஏதுவாக...