×

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம்: மம்தாவை தொடர்ந்து தெலங்கானா முதல்வரும் புறக்கணிக்க முடிவு என தகவல்

டெல்லி : டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதல்வர் முடிவு செய்துள்ளார். கூட்டத்தை புறக்கணிப்பதற்கான காரணத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருந்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 5-வது முறையாக இந்த நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுதான்.

இந்தக் கூட்டத்தில் விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்க போவதாக செய்தயாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு இந்த கூட்டத்தில் தாம் பங்கேற்க விரும்பவில்லை என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு அளிக்க உதவி செய்யும் எந்த அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தெலுங்கானா முதல் சந்திரா சேகர ராவ்-வும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கூட்டத்தை புறக்கணிப்பதற்கான காரணங்கள் குறித்து எந்தவித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

Tags : meeting ,AOK ,Delhi ,Telangana ,Mamata , Funding for Ayodh, Telangana CM, Chandrasekara Rao, boycotting
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்