அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் : ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை : சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேன்மொழியை ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்தார். இதையடுத்து பின் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறினார். மேலும் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என்று சைலேந்திர பாபு உறுதி அளித்தார்.முன்னதாக சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன் மொழி என்ற இளம் பெண்ணை, சுரேந்தர் என்ற இளைஞர் சரமாரியாக வெட்டியுள்ளார்.


Tags : railway stations ,Railway DGP Cylindra Babu , Kilapakkam, Hospital, Siliala Babu, Railway DGP
× RELATED வடசென்னை பகுதிகளில் புதிதாக 500...