×

தேனி அருகே சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்ற காவல் கண்காணிப்பாளர் மீது கல்வீச்சு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்திப்பட்டியை சேர்ந்த சிரஞ்சீவி காவலராக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர் தேவதானப்பட்டி சரகத்திற்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவரை மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சிரஞ்சீவி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரை தாக்கிய மர்மநபர்களை கண்டு பிடித்து கைது செய்ய கோரி சருத்திப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தேனி - திண்டுக்கல் பகுதியில் நேற்றிரவு மறியலில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை களைந்து செல்லும்படி கூறியுள்ளனர்.

அப்போது அவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் காவல் கண்காணிப்பாளர் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதனையடுத்து உடனே போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனை தொடர்ந்து காயமடைந்த எஸ்.பி. பாஸ்கரன் உட்பட போலீசார் அனைவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பாஸ்கரனுக்கு இடது கண் அருகில் பலத்த காயம் என்பதால் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைத்துள்ளனர். மேலும்  மதுரை தென்மண்டல ஐ.ஜி. சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சருத்திப்பட்டி ஊருக்குள் புகுந்து போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


Tags : superintendent ,roadmakers ,Theni , Theni, roadside, involved, trying to disperse, educate police
× RELATED வலங்கைமான் பகுதியில் மணல் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்