திருப்பதியில் தமிழர் மீது தாக்குதல் சம்பவம் : 6 போலீசார் மாற்றம்

திருப்பதி : காஞ்சிபுரத்தை சேர்ந்த டெல்லிபாபு என்பவர் திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திரா போலீசாரால்  தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார்.இந்நிலையில் டெல்லிபாபுவை தாக்கியது தொடர்பாக 4 சிறப்பு அதிரடிப்படை போலீசார் உள்பட 6பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லிபாபுவை தகைய 6போலீசாரையும் இடமாற்றம் செய்து திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


× RELATED பருத்தி வயல்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?