மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: கொல்கத்தாவில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நேற்று தாம்பரத்தில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளை  புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பல இடங்களில் மருத்துவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. கொல்கத்தாவில் இளம் மருத்துவர் தாக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதுபோன்ற செயல்கள் மருத்துவர்களுக்கு  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியின் போது மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இணைந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Doctors , Doctors, protest
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...