×

தேர்தல் பத்திரம் விற்பனை பற்றி ஆர்பிஐ பிறப்பித்த உத்தரவு என்ன?: தகவல்களை வழங்க எஸ்பிஐ மறுப்பு

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி, மத்திய அரசிடம் இருந்து பெற்ற தகவல் தொடர்புகளை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வழங்க ஸ்டேட் பாங்க் மறுத்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள், எஸ்பிஐ வங்கியில் விற்கப்படும் தேர்தல் பத்திரங்கள் மூலம் செலுத்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, ஒருவர் இந்த தேர்தல்  பத்திரங்களை வாங்கி நன்கொடை அளிக்கலாம். இந்த பத்திரங்களை 15 நாட்களுக்குள், அரசியல் கட்சிகள் ரொக்கமாக்கி கொள்ளலாம். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் விஹார் துர்வே என்பவர்,  எஸ்பிஐ.க்கு ஆர்டிஐ மனு ஒன்று அனுப்பியிருந்தார்.

அதில், ‘தேர்தல் பத்திரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி, மத்திய அரசிடம் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வந்த உத்தரவுகள், கடிதங்கள், இ-மெயில் போன்ற தகவல்  தொடர்புகள் முழுவதையும் தர வேண்டும்’ என கேட்டிருந்தார். இதற்கு எஸ்பிஐ வங்கி அளித்த பதிலில், ‘மனுதாரர் கேட்டுள்ள தகவல்கள் அனைத்து வங்கியின் ரகசியம் சம்பந்தப்பட்டவை. இவற்றை தெரிவிக்க ஆர்டிஐ சட்டத்தின் 8(1) பிரிவின் கீழ் விலக்கு உள்ளது. எனவே, இவற்றை தெரிவிக்க முடியாது’  என கூறியுள்ளது.




Tags : sale ,SBI , Regarding, order , RBI,SBI
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...