×

சிதம்பரத்தில் மாடி வீட்டில் இயங்கிய போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

புவனகிரி: சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்ததை மத்திய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துபிடித்துள்ளனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரத்தில் அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர்.

அப்போது, சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள காமாட்சி அம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டிற்குள்ளே சென்ற போலீசார்  அங்கிருந்த காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தர்(26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வீட்டுக்குள் 20 எரிசாராய கேன்கள், 2710 போலி மது பாட்டில்கள், 3550 காலி பாட்டில்கள், மதுபாட்டில்களில் கலர் சேர்க்க பயன்படும் 5 எசன்ஸ்  பாட்டில்கள், டாஸ்மாக்கின் போலியான லேபிள்கள், ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், பாட்டிலை மூடி சீல் வைக்க பயன்படும் இயந்திரம், அட்டை பெட்டிகள் உள்ளிட்டவை இருந்தது.இவற்றை கைப்பற்றிய போலீசார், சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருடன் இணைந்து போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்ட விதம் குறித்து கைது செய்யப்பட்ட சுந்தரிடம் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : plant ,Chidambaram Floor , Running, Chidambaram, Invention ,fake liquor, mill
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...