×

நடிகர் சங்கத்துக்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ்: தேர்தல் நடக்குமா?

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார்.  செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர். சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த்  போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர்களாக இருந்த 61 பேரை தொழில்முறையற்ற உறுப்பினர்களாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்துக்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். இதற்கிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 23ம் ேததி தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Tags : District Registrar ,Actors Association , District Registrar's ,Notice , Association,Election Be Held?
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...