×

விமானம் நொறுங்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் கோவை விமான படை வீரர் பலி: உடல் இன்று ஒப்படைப்பு

கோவை: அருணாசல பிரதேச விமான விபத்தில் பலியா னவர்களில் கோவையை சேர்ந்தவர் என்பது தெரியவ ந்துள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ32 ரக போர் விமானம் கடந்த 3ம் தேதி  அஸ்ஸாமில்் இருந்து சீன எல்லையில் உள்ள மென்சுகா விமானபடை தளத்துக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 13 வீரர்கள் இருந்தனர். விமானம்  புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது.  நேற்று முன்தினம் அருணாச்சல பிரதேசத்தின்  சியாங் மலைப்பகுதியில் மாயமான விமானத்தை கண்டுபிடி த்தனர். அதில் பயணித்த 13 வீரர்களும் உயிரிழந்து விட்டனர். இவர்களில்கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்டு அசாமில் பணியாற்றி வந்த வினோத் ஹரிஹரன்  என்பவரும் ஒருவர்.

இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துள்ளார். பின்னர் கடந்த 2011ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார். இந்திய விமானப்படையில் ஸ்குவாட்ரன் லீடர் ஆக பணியாற்றி வந்தார். அவரது உடல்  அடையாளம் காணப்பட்டு சிங்காநல்லூரில் வசித்து வரும் அவரது தாயாரிடம் இன்று அல்லது நாளை ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Coimbatore ,cadre ,Air Force , plane crash, Coimbatore, Air Force, Body, today
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...