×

மாணவிகள் திடீர் முற்றுகை

கோபியில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச  லேப்டாப் வழங்குவதற்காக  அமைச்சர் செங்கோட்டையன், கலெக்டர் கதிரவன், முதன்மை கல்வி அலுவலர்  பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அமைச்சர்  கார், பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் சுமார் 100க்கும் மேற்பட்ட  மாணவிகள் சூழ்ந்து நின்றுகொண்டு முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் காரில் இருந்து இறங்கி அவர்களிடம் பேசினார்.
அப்போது கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்  கிடைக்கவில்லை என தெரிவித்தனர். அவர்களிடம் அமைச்சர்  ‘‘இன்னும் 2 மாதங்களில்  வழங்கிவிடுவோம்’’ என கூறினார். ஆனால் அவரது உறுதியை ஏற்க மறுத்த  மாணவிகள், தொடர்ந்து இதுபோன்றுதான் கூறுகிறீர்கள். இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்ைல’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அமைச்சர், ‘‘ லேப்டாப் வேண்டும் என்றால் கலைந்து செல்லுங்கள். அனைவருக்கும் 2 மாத  காலத்தில் லேப்டாப் வழங்கப்படும். அதற்கான உத்தரவை வேண்டுமானாலும்  காட்டுகிறேன்’’ என்று பதிலளித்தார். . அதன்பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.


Tags : Siege , Sudden blockade of students
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...