×

2 மாத தடைக்காலம் நிறைவு 800 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு பயணம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பரபரப்பானது

ராமேஸ்வரம்: தமிழக கடலில் மீன்களை பாதுகாக்கும் வகையில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 60 நாட்கள், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி மற்றும் வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டன. இதனால் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் வருவாய் இழப்பும் ஏற்பட்டது. தடைக்காலத்தில் நாட்டுப்படகு மீனவர்களால் பிடித்து வரப்பட்ட மீன்களின் விலையும் பலமடங்கு அதிகரித்தது. மேலும், காற்று காரணமாக கடந்த சில நாட்களாக மீன் வரத்து போதிய அளவு இல்ைல. வேலையில்லாததையடுத்து ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றுத்தொழில் தேடி சென்றிருந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை ராமேஸ்வரம் உட்பட மாவட்டத்தின் மற்ற ஊர்களுக்கு திரும்பி வந்தனர்.

நேற்று நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது. ஆனால், ராமேஸ்வரம் மீனவர்கள் முன்னதாகவே நேற்று மாலை 800 விசைப்படகுகளில் பாக்ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன்வளத்துறை அலுவலகத்தில் டோக்கன் பெற்றுச் செல்லவில்லை.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மற்ற கடல் பகுதி விசைப்படகு மீனவர்கள் இன்று காலை டோக்கன் பெற்று கடலுக்கு செல்ல உள்ளனர். இதனையடுத்து ராமேஸ்வரம் மீன்படி துறைமுகம் நேற்று பரபரப்பு அடைந்தது. 2 மாதங்களுக்கு பின் படகுகள் சாரை சாரையாக அணிவகுத்து சென்றன. பாக்ஜலசந்தி கடலுக்கு செல்லும் மீனவர்கள் இறால் மீன் பிடிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தடை முடிந்து செல்வதால் டன் கணக்கில் இறால் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்தனர்.



Tags : fishermen ,Rameshwaram ,sea , Complete 2 month barrier, 800 keyboards. Fishermen,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...