கடலூர் நோயாளிக்கு நிபா காய்ச்சல் இல்லை

புதுச்சேரி: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. எர்ணாவூர் பகுதியில் கடலூரை சேர்ந்த நடராஜன் (55) என்பவர் கூலி வேலை செய்துள்ளார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 6 நாட்களுக்கு முன் கடலூர் திரும்பினார்.  தொடர்ந்து 10ம்தேதி ஜிப்மர் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் நிபா வைரஸ் தாக்குதலுக்கான சில அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. பின்னர், தனி வார்டில் அவரை அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  நடராஜனின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனேவில் உள்ள மத்திய அரசின் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  நேற்று அதன் அறிக்கை ஜிப்மருக்கு வந்தது. அதில் நடராஜனுக்கு நிபா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே நடராஜனின் சொந்த ஊரில் மருத்துவ குழு முகாமிட்டு நோய் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Cuddalore ,patient , Cuddalore ,patient , no nifa
× RELATED கிணறு போன்று வீடு காணவில்லை: கடலூர்...