தங்கம் இறக்குமதி 37.43 சதவீதம் எகிறியது

புதுடெல்லி: கடந்த மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 3.93 சதவீதம் உயர்ந்து 3,000 கோடி டாலர் ஆகியுள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரசாயனம், மருந்து துறை, இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்ததே இதற்கு காரணம்.  இறக்குமதி 4.31 சதவீதம் உயர்ந்து 4,535 கோடி டாலராக உள்ளது. எண்ணெய் 8.23 சதவீதம், எண்ணெய் சாரா பொருட்கள் இறக்குமதி 2.9 சதவீதம் உயர்ந்துள்ளது. தங்கம் இறக்குமதி 37.43 சதவீதம் அதிகரித்து 478 கோடி டாலராக உள்ளது. வர்த்தக பற்றாக்குறை 153.6 ேகாடி டாலராக உள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை ஏற்றுமதி 2.37 சதவீதம் உயர்ந்து 560 கோடி டாலராகவும், இறக்குமதி 4.39 சதவீதம் உயர்ந்து 867.5 கோடி டாலராகவும் உள்ளது. இதன்மூலம் வர்த்தக பற்றாக்குறை 306.9 கோடி டாலராக உள்ளது.

Tags : Gold, 37.43 percent
× RELATED 4,000 டன் வெங்காயம் இறக்குமதிக்கு டெண்டர்