விபத்தில் சிக்கிய ராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

இட்டாநகர்: அசாம் மாநிலம், ஜோர்காத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற இந்திய விமானப்படையை சேர்ந்த ஏ என் 32 ரக சரக்கு விமானம் கடந்த 3ம் தேதி விபத்தில் சிக்கியது. அதில், பயணம் செய்த 13 பேரும் பலியானதாக விமானப்படை நேற்று முன்தினம் உறுதி செய்தது. மோசமான வானிலை, தொடர் மழை காரணமாக, இவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புகுழுவினர் விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியையும், விமானியின் அறையில் உள்ள குரல் பதிவு கருவியையும் மீட்டுள்ளனர். இவற்றை ஆராய்ந்த பிறகே, விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணங்கள் தெரியவரும்.

Tags : crash , A 32 Myriad Cargo Flight, Black Box Recovery
× RELATED விபத்தா ? தற்கொலையா?: 'நான் காதலில்...