×

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம், புதுச்சேரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறுகையில், ‘‘பணியில் இருக்கும் டாக்டரை தாக்குவது சட்டப்படி குற்றம். அதை தடுக்க சட்டம் இருக்கிறது. ஆனால் அந்த சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முறையாக பின்பற்றவில்லை.

விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தால் அதற்கு டாக்டர் எவ்வாறு பொறுப்பாக முடியும். பணியில் இருக்கும் டாக்டர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியே கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்துகிறோம். கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்கிறோம்’’ என்றனர்.  இந்நிலையில் குறிப்பிட்ட பணியில் உள்ள டாக்டர்களின் பாதுகாப்பை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புதுச்சேரியிலும் மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.





Tags : doctors ,attack ,Tamilnadu ,doctor ,Puducherry ,Kolkata , Kolkata, Trainer, Tamil Nadu, Puducherry, Doctors demonstrate
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு