×

5.18 கோடியில் பள்ளி, கல்லூரி விடுதி கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை, விழுப்புரம், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 5 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 5 விடுதிக் கட்டிடங்களை  முதல்வர் நேற்று திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், அத்தாணியில் 93 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூரில் 94 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதி, தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் 1 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதி,

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 1 கோடியே 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதி மற்றும் திருப்பூர் மாவட்டம், திருப்பூரில் 81 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சீர்மரபினர் நலப் பள்ளி மாணவர் விடுதி என மொத்தம் 5 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 5 விடுதிக் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.



Tags : school ,college building building ,Chief Minister , School, college hotel building, chief minister
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி