×

தொடர் மழையால் வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறையில் கூட்டம் நிரம்பி வழியும். கோடை சீசன் முடிந்த பின்னர் வடமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சூறைகாற்றுடன் மழை தொடர்ந்து பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று தடங்கல் ஏற்பட்டு வருகிறது.  கன்னியாகுமரியிலும் மழை பெய்வதால் வடமாநில சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. இதனால் கடற்கரை, சன்னதி தெரு உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தரக்குறைவாக பேசும் வியாபாரிகள் கன்னியாகுமரிக்கு வடமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் இங்குள்ள மக்கள் மற்றும் வியாபாரிகள் பேசுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி சில வியாபாரிகள் வடமாநில சுற்றுலா பயணிகளை மிகவும் தரக்குறைவாக பேசுகின்றனர்.

வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க பேரம் பேசுகின்றனர். அவர்களுக்கு சாதகமான விலை கிடைக்கவில்லை என்றாலோ, பொருளை பார்த்த பின் பிடிக்கவில்லை என்றாலோ அவர்கள் அந்த பொருளை வாங்குவதில்லை. இதையடுத்து வியாபரிகள் அவர்களை தமிழில் மிகவும் தரக்குறைவாக பேசுகின்றனர். கெட்ட வார்த்தை பேசுவது, பெண்களை இழிவாக பேசுவது என கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். வடமாநிலத்தவராக இருந்தாலும் தமிழ் தெரிந்தவர்களும் வருகின்றனர். அவர்கள் இந்த வியாபாரிகளின் பேச்சை புரிந்துக்கொண்டு தட்டிகேட்பதால் அங்கு பெரும் பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு தொல்லைகள் இருந்து வருகின்றன. எனவே சுற்றுலா பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கும் வகையில் வியாபாரிகளும், இங்குள்ளவர்களும் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : beach ,Kanyakumari , Kanyakumari beach ,eruption of the rain
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...