திருவானைக்காவல் தங்க கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருச்சி : திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சன்னதி முன் அமைக்கப்பட்ட புதிய தங்க கொடிமரத்திற்கு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இக்கோவிலில் ஆடி வெள்ளி, ஆடிபூரம், நவராத்திரி, வசந்த உற்சவம், மண்டல பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் பிரமாண்டமாக நடைபெறும்.அகிலாண்டேஸ்வரி சன்னதி முன் 50 அடி உயரத்தில் தாமிர தகடுகள் பொருத்தப்பட்ட கொடிமரம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கொடிமரத்தின் மரம் மாற்றப்பட்டு புதிய தாமிர தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூசப்பட்டு கொடிமரம் புதுப்பிக்கப்பட்டது.  

கொடிமரத்தின் கீழ்பகுதியில் இருந்து 5 அடி உயரத்தில் கிழக்கு  பகுதியில் அகிலாண்டேஸ்வரி, மேற்கில் விநாயகர், தெற்கில் சுவாமி, அம்பாள், வடக்கில் துர்க்கை உருவங்களுடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த தங்க கொடிமரத்தின் கும்பாபிஷேகத்திற்கான முதல் யாகசாலை பூஜை நேற்றிரவு நடைபெற்றது.  இன்றுகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகாபூர்ணஹூதி நடைபெற்றது. காலை 8.15 மணியளவில் தங்க கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

× RELATED அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில்...