திமுக-வின் கோரிக்கையை ஏற்று தமிழில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது தெற்கு ரயில்வே

சென்னை : தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. திமுகவினர் கோரிக்கையை ஏற்று சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ராகுல் ஜெயின் அறிவித்துள்ளார். அதில் மே-17ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் திமுகவினர் 500 பேர் திரண்டு சென்று மனு அளித்தனர். அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை தெற்கு ரயில்வே உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான தொடர்பு மொழி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும் என அறிவித்து அறிக்கை ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டிருந்தது.

பிராந்திய மொழிகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையேயான தொடர்பின்போது தகவல் புரிதல் குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்புக்கு திமுக உட்பட பல கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் திமுகவினர் 500 பேர் திரண்டு சென்று மனு அளித்தனர். அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை தெற்கு ரயில்வே உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. திமுகவின் கோரிக்கையை ஏற்று ரயில்வே ஊழியர்கள் தமிழில் பேச தடைவிதிக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் உறுதியளித்தார். தாங்கள் முன்வைத்த கோரிக்கையை தென்னக ரயில்வே ஏற்றுக்கொண்டது குறித்து கூடியிருந்த திமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தயாநிதி மாறன் பேட்டி:

பொதுமேலாளரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெற்கு ரயில்வே மேலாளரிடம் சுற்றறிக்கையை திரும்பப் பெறுமாறு தொலைபேசியில் வலியுறுத்தினார். மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை அடுத்து மே 17-ம் வெளியிட்ட சுற்றிக்கையை தெற்கு ரயில்வே மேலாளர் ராகுல் திரும்பப் பெற்றதாக தெரிவித்தார்.

Tags : Southern Railway ,DMK , DMK, Request, Circular, Southern Railway
× RELATED தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட...