×

பஞ்சாப் மாநிலத்தில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலைகளில் திடீர் தீ விபத்து

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லூதியானாவில் நூர்வாலா சாலையில் உள்ள  சிவ்புரி பகுதியில் 3 ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  3 அடுக்குகளை கொண்ட இந்த நிறுவனங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் உடனடியாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து 16 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை அடைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன.

மேலும் தீ விபத்தில் எவரும் காயமடைந்ததாக இதுவரை தகவல் ஏதும் இல்லை, எனினும் பல லட்சம் ரூபாய் பொருட்கள் தீயில் கருகியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து  ஆடை தொழிற்சாலை என்பதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : fire ,province ,Punjab ,garment factories , Ludhiana, Punjab state, ready-made garments, production, factory, blaze
× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...